Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2016

கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடிய வாலிபருக்கு 7 நாள் ஜெயில்- 21 டாலர் அபராதம்


இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடிய ரசிகருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் பல்லேகெலேயில் தொடங்கியது. முதல் ஆள் ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் இன்னிங்சில் 117 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது.

ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் வீரர்கள், நடுவர்கள், பாதுகாவலர்கள் என அவைரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். அப்போது ரசிகர் ஒருவர் தடுப்பு அரணை தாண்டி மைதானத்திற்குள் புகுந்து ஓடினார். ஆடிக்கொண்டே ஓடிய அவர் திடீரென தன் ஆடைகள் முழுவதையும் களைந்து விட்டு நிர்வாணமாக ஓடினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் டிரவுசரை மாட்டிக்கொண்டு திரும்பினார்.

பின்னர் போலீசார் அந்த நபரை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் பெயர் அலெக்ஸ் ஜேம்ஸ் என தெரியவந்தது. ஜேம்ஸ் நேற்று கண்டி கூடுதல் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 7 நாள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் (சுமார் 21 டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.