மலேசியாவிற்கு அப்பள பொட்டலங்களில் மறைத்து கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள போதை பொருளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகள் சோதனை
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானத்தில் பெருமளவில் போதை பொருள் கடத்த இருப்பதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னையில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஷாஜகான்(வயது 52) என்பவர் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு செல்ல வந்திருந்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி உடைமைகளை சோதனை செய்தனர்.
ரூ.2 கோடி மதிப்பு
அவருடைய சூட்கேசில் 100 அப்பள பொட்டலங்கள் இருந்தது. அப்பள பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது அதில் ‘கேட்டமைன்’ என்ற போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.2 கோடி மதிப்புள்ள 5 கிலோ எடை கொண்ட அந்த போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஷாஜகான் விமான பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளுடன் அவரை கைது செய்து சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். ஷாஜகான் பணத்துக்காக போதை பொருளை கடத்திச்செல்ல இருந்ததாக தெரியவந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.