Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2016

தாஜ்மகாலுக்கு பிறகு அதிகம் பேர் புகைப்படம் எடுத்த கட்டிடம் சி.எஸ்.டி. ரெயில்நிலையம் ஜே.ஜே. கல்லூரி முதல்வர் பெருமிதம்


இந்தியாவில் தாஜ்மகாலுக்கு பிறகு அதிகம் பேர் புகைப்படம் எடுத்த கட்டிடம் சி.எஸ்.டி. ரெயில்நிலையம் தான் என்று மும்பை ஜே.ஜே. கட்டிடக்கலை கல்லூரி முதல்வர் பெருமிதத்துடன் கூறினார்.

உலக பாரம்பரிய கட்டிடம்
மும்பை சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் மத்திய ரெயில்வே தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. சி.எஸ்.டி. ரெயில் நிலையம் 1888–ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடமாகும். இது மும்பையின் பிரபல சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கட்டிடம் உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் கடந்த 2004–ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

சி.எஸ்.டி. ரெயில்நிலைய கட்டிடம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட 12–வது ஆண்டு வார விழா மத்திய ரெயில்வேயால் கடந்த 2–ந்தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

தாஜ்மகாலுக்கு பிறகு...
இதையொட்டி தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த விழாவில் ஜே.ஜே. கட்டிடக்கலை கல்லூரி முதல்வர் ராஜூவ் மிஸ்ரா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் தாஜ்மகாலுக்கு பிறகு அதிகம் பேர் புகைப்படம் எடுத்த கட்டிடம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சி.எஸ்.டி. ரெயில்நிலைய கட்டிடம் ஆகும்.

சி.எஸ்.டி. ரெயில்நிலையம் வெறும் கட்டிடம் அல்ல. இது மும்பையின் சிறப்பை பிரதிபலித்து வருகிறது’’ என பெருமிதத்துடன் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.