பீகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டிலும் மரத்தடியில் குழுவாக அமர்ந்து மாணவர்கள் காப்பி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் சிலர் காப்பியடித்து எழுதி முதலிடம் பிடித்தனர்.
அவர்கள் மீது சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தியபோது முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பீகார் மாணவர்கள் அவர்களின் எதிர் காலத்தை பாதுகாக்க ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வந்து படிக்கலாம் என்று அம்மாநில முதல்-மந்திரி ரகுவர்தாஸ் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிளஸ்-1 மாணவர்கள் காப்பியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம் கோவிந்தபூரில் உள்ள ஆர்.எஸ்.மோர் பள்ளியில் கடந்த 9-ந்தேதி பிளஸ்-1 தேர்வு நடந்தது. இந்த தேர்வு அந்த பள்ளியில் உள்ள மரத்தடியில் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் குழுவாக அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இதனை பயன்படுத்தி மாணவர்கள் ஒருவருக்கொருவர் காப்பியடித்து தேர்வு எழுதினர். சிலர் பாடப்புத்தகங்களை பார்த்தும் தேர்வு எழுதினர். சிலர் வகுப்பறைகளில் அமர்ந்து தேர்வு எழுதினர். அவர்களும் மேஜையில் அருகருகே அமரவைக்கப்பட்டனர். அவர்களும் ஒருவரை பார்த்து மற்றொருவர் காப்பி அடித்தனர்.
இது மட்டுமின்றி ஒரு மாணவருக்கு பதிலாக அவரது தந்தை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
இந்த தேர்வு முறைகேடு ஊடகங்களில் வெளியானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில அகாடமி கவுன்சில் துணைத் தலைவர் புல்சிங் கூறும்போது, “ஊடகங்கள் மூலமே இந்த முறைகேடு எங்கள் கவனத்துக்கு வந்தது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
இந்த முறைகேடு நடந்த பள்ளி வினோபாவே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது என்பதால் அதன் துணைவேந்தர் குர்தீப்சிங், இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேர்வு மைய கண்காணிப்பாளர் கிரன்சிங் விளக்கம் அளித்துள்ளார். அதில், “தேர்வு மையத்தில் அனைத்து மாணவர்களும் தூரமாக அமர்ந்து தேர்வு எழுத போதிய அறைகள் இல்லை. எனவே மாணவர்கள் அருகருகே அமர வைக்கப்பட்டனர்” என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.