இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய நபரை பெண்கள் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய், பொதுமக்கள் முன்னிலையில் தாக்கும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பெண்கள் உரிமைகள் ஆர்வலரான பூமாதா பிரிகேட் தலைவர் திருப்தி தேசாய், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை நேரடியாக தட்டிக்கேட்பதுடன், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தி வருகிறார்.
அவ்வகையில், இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஒரு வாலிபரை திருப்தி தேசாய் பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடித்து தண்டனை வழங்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிவிட்டு, கருவை கலைக்கும்படி கட்டாயப்படுத்தியதால் அந்த நபருக்கு பாடம் புகட்டியதாக தேசாய் கூறியுள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற வன்முறைகள் நடக்கும்போது நேரடியாக தண்டனை வழங்குவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபரை போலீசார் கைது செய்து கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.