வாணியம்பாடி,
வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசால் கட்டப்பட்ட 12 அடி உயர தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியது. இந்த தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்காததால் தமிழக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தடுப்பணை நிரம்பியது
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புல்லூர் என்ற இடத்தில் தமிழக-ஆந்திர மாநில எல்லையில் பெரும்பள்ளம் என்ற பகுதியில் பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரமாக இருந்த தடுப்பணையை ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்தி கட்டியது. மேலும் 5 இடங்களில் பெரிய தடுப்பணைகளையும், பல இடங்களில் சிறிய அளவிலான தடுப்பணைகளையும் ஆந்திர அரசு கட்டி உள்ளது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக குப்பம் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கனகநாச்சியம்மன் கோவில் அருகே பெரும்பள்ளம் தடுப்பணையில் 12 அடி உயரம் வரை உள்ள தடுப் பணையில் தண்ணீர் நிரம்பியது.
5 அடி உயரத்தில் தடுப்பணை இருந்திருந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் வந்து இருக்கும். தற்போது 12 அடியாக உயர்த்தி உள்ளதால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
விவசாயிகள் வேதனை
இதை கண்ட தமிழக விவசாயிகள் இந்த தண்ணீர் தங்களுக்கு எந்த பயனும் அளிக்காததால் வேதனை அடைந்துள்ளனர். பாலாற்றை நம்பியுள்ள வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பாலாற்றில் இருந்து இனி தண்ணீர் கிடைக்குமா? என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை கட்டியதோடு மட்டுமில்லாமல் அங்குள்ள கனகநாச்சியம்மன் கோவிலையும் கைப்பற்றி, கோவில் நிர்வாகத்திற்கு 13 பேர் கொண்ட அறங்காவலர் குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.