Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2016

பாலியல் புகாரில் கைதான பிரமுகர் ஜாமினில் விடுதலை: மனமுடைந்த ஆம் ஆத்மி பெண் தொண்டர் தற்கொலை


பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர் ஜாமினில் விடுதலையானதை அறிந்து மனமுடைந்த ஆம் ஆத்மி பெண் தொண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

டெல்லி புறநகர் பகுதியான நரேலாவில் வசித்துவந்த ஒருபெண், சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகரான ரமேஷ் வாத்வா என்பவருக்கு எதிராக போலீசில் பாலியல் புகார் அளித்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் பெண் தொண்டரான தன்னிடம் ரமேஷ் வாத்வா என்ற பிரமுகர் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், தனது உடலின் தொடக்கூடாத பாகங்களை தொட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கடந்த மாதம் போலீசில் அளித்த புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக, ரமேஷ் வாத்வா மீது வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், அவரை கைது செய்து விசாரித்துவந்த நிலையில், உள்ளூர் எம்.எல்.ஏ.வின் ஆதரவால் ரமேஷ் வாத்வா ஜாமினில் விடுதலையானார். இதுபற்றிய தகவல் அறிந்த நாளில் இருந்தே மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பெண், நேற்று பிற்பகல் விஷம் குடித்த நிலையில் தனது வீட்டில் மயங்கி கிடந்தார்.

உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த பெண்ணின் தற்கொலை ஆம் ஆத்மி கட்சியின் நிஜமுகத்தை காட்டுகிறது. தற்கொலை செய்துகொண்ட அந்தப் பெண் தொண்டரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ரமேஷ் வாத்வா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட உள்ளூர் எம்.எல்.ஏ. ஆகியோர்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டெல்லி பா.ஜ.க. தலைவர் சதிஷ் உபாத்யாய் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.