Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

தொண்டர்களின் ரத்தத்தை அட்டைபோல் உறிஞ்சி விட்டார்: கட்சியிலிருந்து விலகிய சென்னை மாவட்ட செயலாளர் பேட்டி


சென்னையில் தொண்டர்களின் ரத்தத்தை அட்டைபோல் உறிஞ்சி விட்டார் விஜயகாந்த் என்று கட்சியிலிருந்து விலகிய சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் பேட்டியளித்துள்ளார்.

தொண்டர்களின் ரத்தத்தை அட்டைபோல் உறிஞ்சி விட்டார்: கட்சியிலிருந்து விலகிய சென்னை மாவட்ட செயலாளர் பேட்டி

சென்னை:

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. படுதோல்வி அடைந்ததையடுத்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை அமைத்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

கடந்த மாதம் தொடர்ச்சியாக நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சரமாரி குற்றச்சாட்டுகளை தலைமைக்கு எதிராக எழுப்பினார்.

கூட்டணி முடிவால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை விஜயகாந்த் ஏற்கவில்லை. எப்போதும் போல ஆவேசமாக பேசினார். தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் கட்சியை கலைக்கவும் தயங்க மாட்டேன் என்று பேசினார்.

இதனால் தே.மு.தி.க.வில் இருந்து மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பில் உள்ளவர்கள் விலகி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் மற்றும் பகுதி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தே.மு.தி.க.வில் இருந்து நேற்று விலகினர்.

விலகிய மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் அ.தி.மு.க.வில் விரைவில் இணைகிறார். இதுவரையில் தே.மு.தி.க.வில் இருந்து விலகிய நிர்வாகிகள் அ.தி.மு.க., தி.மு.க.வில் ஐக்கியம் ஆகி வருகிறார்கள்.

தே.மு.தி.க.வில் இருந்து திடீரென விலகிய ஏ.எம்.காமராஜ் மாலைமலருக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு தொண்டர்கள் பற்றி கவலை இல்லை. தனது குடும்பம் ஒன்றுதான் முக்கியம். மனைவி பிரேமலதா, மகன்கள் நலனுக்காக கட்சியை நடத்தி வருகிறார்.

தே.மு.தி.க.வில் நாங்கள் அடிமைகளாக இருந்து வந்தோம். எந்த கருத்தையும் சொல்ல முடியாது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான் ஒரு சில கருத்துக்களை கூறினேன்.

பெரும்பான்மை தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டும். அதுதான் கட்சி வளர்ச்சிக்கு நல்லது என்று கூறினேன். அன்று முதல் என்னை ஓரம்கட்டும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து என்னை அவமதிக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

அவரது கொள்கை, கோட்பாடு பிடித்துதான் இந்த கட்சியில் சேர்ந்து உழைத்தோம். செலவழித்தோம். ஆனால் அது பலன் இல்லாமல் போய் விட்டது.

தொண்டர்களின் உழைப்பை ரத்தமாக உறிஞ்சும் அவர் அதில் குடும்ப நலனை மட்டுமே பார்க்கிறார். தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை.

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி முடிவுகளை மாற்றி ஆதாயம் தேடுகிறார். இனியும் அந்த கட்சியில் இருந்தால் என் உழைப்பு, பணம் எல்லாம் வீணாக விரயமாகுமே தவிர வேறு எந்த பயனும் கிடைக்க போவதில்லை. அதனால் தே.மு.தி.க.வில் இருந்து வெளியேறி விட்டேன். விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பேன்.

என்னுடன் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கலந்து ஆலோசித்து வேறு கட்சியில் இணைவது பற்றி அறிவிப்பேன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.