Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

87 வயது பாட்டியை பின்தொடரும் இளசுகள்.. அப்படி அவர் என்னதான் செய்கிறார்?


பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் குடிகொள்ளும் கூடாரமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வயதான ஒருவர். அதுவும் கிட்டத்தட்ட 87 வயதாகும் ஒருவர் சமூக வலைத்தளங்களில் படுவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் அதனை நம்புமுடிகிறதா..? இன்னும் ஆச்சரியம் என்னவென்றால் பல பெரிய பெரிய பிரபலங்களும் அவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்..

பேஸ்புக்கில் ஒரு போட்டாவை பதிவேற்றம் செய்துவிட்டு லைக் கிடைக்காதா என ஏங்கி ஏங்கி எண்ணி பார்த்துக் கொண்டிருக்கும் இளசுகள் மத்தியில் தனது கவர்ந்திழுக்கும் தன்மையால் பல பேரை சமூக வலைத்தளங்களில் கட்டிப் போட்டு வைத்துள்ளார் ஹெலன் வேன் விங்கிள் என்ற 87 வயதான மூதாட்டி.
Aunt5
‘பாடி விங்கிள்’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் விங்கிள். இவர் கணக்கு தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் வட்டம் இவரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியதன் காரணமாக தற்போது 2 மில்லியன் பாலோவர்ஸ் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர். 220 ஆயிரம் பேர் இவரை டுவிட்டரில் பின்தொடர்கின்றனர்.
Aunt7
சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வட்டாரம் இவரை பின்தொடர விங்கிள் என்னவென்ன காரியங்கள் எல்லாம் செய்கிறார் என நாமும் தெரிந்து கொள்வாமே...

*87 வயதான க்யூட் அன்ட் செக்ஸி விங்கிள் அடுத்தவர் என்ன நினைக்கிறார் என்பது குறித்து கவலையெல்லாம் கொள்வதில்லையாம்.. தனக்கு பிடித்திருந்தால் அந்த போட்டோவை தைரியமாக உடனடியாக பதிவேற்றம் செய்து விடுவாராம்.
Aunt8
*இளசுகள் எல்லாம் தனது வயதை ஒன்றிரண்டு குறைத்துக் காமிக்க ஆசைப்படும் நிலையில், விங்கிளோ தைரியமாக நான் 1928-ல் பிறந்தவள் என டேக் லைன் வைத்துள்ளார்.

*நான் எனது கணவன் மற்றும் மகனை இழந்தவள்... அதற்காக வருத்தப்பட்டு வருத்தப்பட்டே சோர்வகி போனவள்.. எனவே தற்போது என்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன்..என்ற கூறி இவர் பதிவேற்றிய போட்டோவிற்கு 128.4K லைக்குகளும், 72.8K கமெண்டுகளும் வந்துள்ளன.

*விங்கிள் அணிந்திருக்கும் மிகச் சிறிய பிரகாசமான ஆடைகள், அவரது ஆளுமை ஆகியவை சமூக வலைத்தளங்களில் அவரை பல முக்கிய பிரபலங்களும் பின்தொடர காரணமாக அமைந்துள்ளன.

*ரியாலிட்டி ஷோ ராணி என வர்ணிக்கப்படும் கர்தாஷியன் உடன் இவர் சேர்ந்து இருக்கும் போட்டோவிற்கு 88.3K லைக்குகள் வந்துள்ளன.

*நான் எதற்கும் வெட்கப்படாதகவள், நான் என் இளமைக் காலத்தில் இருந்ததை போன்று சுறுசுறுப்பாக இப்போதும் இருக்கிறேன் என கூறி அனைவரும் ரசிக்கும் விதமாக தனது குழந்தைத்தனமான செய்கையால் அவர் பதிவேற்றியுள்ள வீடியோவிற்கு லைக்-குகள் எக்கச்சக்கமாக வருகிறது.

*நான் இதுவைரை ஒருகாலும் முதுமையை உணர்ந்ததில்லை. இனிமேலும் முதுமை போல உணரமாட்டேன். நான் விரும்பிய ஆடைகளை உடுத்திக் கொள்வேன் என கவர்ச்சி உடைகளையும் அணிந்து விங்கிள் கலக்கி வருகிறார்.

*தான் நல்ல நலமுடன் இருப்பதாக உணரும் விங்கிள் இன்னும் நீண்ட நாட்கள் வாழ்வேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.