Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2016

நரேந்திர மோடி யின் சபையில் 72 கோடீஸ்வரர்கள்



சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட நரேந்திர மோடி அமைச்சரவையில் 78 பேர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இவர்களில் 24 பேர் மீது கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மோடி அமைச்சரவையில் 19 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர், ஐந்து பேர் நீக்கம் செய்யப்பட்டனர். தற்பொழுது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பாக 8.73 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த அமைச்சரவைக்கும் சேர்த்து கணக்கிடுகையில் இதன் சராசரி 12.94 கோடிகளாக உயருகிறது. இந்த தகவல்களை டில்லியை மையமாக வைத்தும் இயங்கும் Association for Democratic Reforms (ADR). என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
புதிதாக அசேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்களில் அதிகப்படியான சொத்து மதிப்பாக மத்திய பிரதேச ராஜிய சபா உறுப்பினர் எம்.ஜே.கபர் 44.9 கோடிகளை தனது சொத்து மதிப்பாக அறிவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பி.பி. சவுத்ரி 35.35 கோடிகளும், விஜய் கோயல் 29.97 கோடிகளும் தங்களது சொத்து மதிப்பாக அறிவித்துள்ளனர்.
புதிய அமைச்சரவையில் ஒரு கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளவர்களில் ரமேஷ் ஜிகாஜினகி, புருசோத்தம் கோடாபாய் ருபாலா, அனுபிரியா சிங் படேல், மகேந்திர நாத், பாக்கான் சிங் குலாஸ்டே, ராஜென் கோஹைன், எஸ்.எஸ். அஹ்லுவாலியா, அர்ஜுன் ராம் மேக்வால், சி.ஆர். சவுத்ரி, மன்சுக்பாய் லக்ஷ்மன்பாய் மன்டாவியா மற்றும் கிர்ஷன ராஜ் ஆகியோர் அடங்குவர்.
ADR இன் அறிக்கைப்படி 78 அமைச்சர்களில் 9 பேர் 30 கோடிகளுக்கும் அதிகாமான சொத்து மதிப்பு உடையவர்கள் என்றும் இதில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 113 கோடி சொத்து மதிப்புடையவர் என்றும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிமத் கவுர் பதல் 108 கோடிகள் சொத்து மதிப்புடையவர் என்றும் மின்துறை அமைச்சர் கோயல் பியுஷ் வேத்பிரகாஷ் 95 கோடி சொத்து மதிப்புடையவர் என்றும் ADR அறிக்கை கூறுகிறது.
ஆறு அமைச்சர்கள் 1 கோடி ரூபாய்களுக்கும் குறைவான சொத்து மதிப்புள்ளவர்களாகவும் புதிதாக பதவி ஏற்றவர்களில் 7 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்கு உடையவர்கள் என்றும் மொத்தமுள்ள 78 அமைச்சர்களில் 24 அமைச்சர்கள் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும் ADR தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.