அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 19 பேர் புதியதாக சேர்க்கப்பட்டனர். தற்போது மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
புதிய அமைச்சர்களில் மத்திய பிரதேத்தை சேர்ந்த எம்.ஜே. அக்பரின் சொத்து மதிப்புரூ. 44. 90 கோடி ஆகும். தொடர்ந்து பி.பி. சவுத்ரி ரூ.35.35 கோடிக்கு சொத்து வைத்துள்ளார். விஜய் கோயல் 29.90 கோடிக்கு சொத்து வைத்துள்ளார். மொத்தத்தில் புதியதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்புரூ. 8.73 கோடி ஆகும். புதிய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் சிந்தியா குறைந்த சொத்து மதிப்பு கொண்டவர். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.60.97 லட்சம்தான். புதிய அமைச்சர்களில் 12 பேர் ஒரு கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள்.
இப்போதுள்ள 78 மத்திய அமைச்சர்களில் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு அதிகபட்சமாக ரூ.113 கோடிக்கு சொத்து உள்ளது. இவருக்குதான் இந்த பட்டியலில் முதலிடம்.உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ரூ.108 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் இருக்கிறார். எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயல்,ரூ. 95 கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தை பெற்றுள்ளார்.
மொத்த 78 மத்திய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.94 கோடி ஆகும். மோடியின் அமைச்சரவையில் 78 பேரில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அமைச்சர்களில் 31 முதல் 40 வயதுக்குள் 31 பேர் உள்ளனர். 41 முதல் 60 வயது கொண்டவர்கள் 31 பேர் இடம் பெற்றுள்ளனர். பள்ளி படிப்பு அதற்கும் குறைவாக படித்தவர்களின் எண்ணிக்கை 14 பேர். பட்டதாரிகள் முதுநிலை பட்டதாரிகள் 63 பேர். 9 பெண் அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த திங் அண்டு தேங்க் நிறுவனம் செய்த ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.