Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2016

சூரியன் மறைந்த பிறகு சென்னையில் இரவு 7 மணிக்கும் பகல் போல் காட்சி அளித்தது


சூரியன் மறைந்த பிறகும் சென்னையில் இரவு 7 மணிக்கும் பகல் பொழுது போல் காட்சி அளித்தது.

நீண்ட பகல் பொழுது

நாம் வாழும் பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒரு நாள் என்கிறோம்.

கடந்த சில நாட்களாக பகல் பொழுது நீண்ட நேரம் நீடித்து வருகிறது. இரவு 7 மணிக்கு பிறகுதான் இருள் சூழவே ஆரம்பிக்கிறது. நேற்றும் அதே நிலை இருந்தது. இரவு 7 மணிக்கு கூட தொலைவில் உள்ள கட்டிடங்களை தெளிவாக காணமுடிந்தது. வாகனங்களில் சென்றவர்களும் முகப்பு விளக்குகளை எரிய விடாமல் சென்றதை காணமுடிந்தது.

இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-

வானிலை மாற்றம்

சூரியன் வடக்கு நோக்கி நகரும்போது, காலையில் சூரியன் உதிப்பதும் வழக்கத்தை விட சற்று முன்கூட்டியே நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில் இரவை விட பகல் பொழுது சற்று அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் சூரியனில் இருந்து ‘பெரிலைட்’ என்ற வெளிச்சம் வெளியாகிறது. இதனால் மாலைப்பொழுதில் சூரியன் மறைந்தாலும் சற்று வெளிச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும். இதனை அறிய நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆண்டு தோறும் வானிலை மாற்றங்களில் இதுவும் ஒன்று. பொதுமக்கள் இதனை ஒரு அதிசய நிகழ்வாக எடுத்துக்கொள்கின்றனர்.

இந்த நிலை சுமார் 15 நாட்களுக்கு இருக்கக்கூடும். மேக கூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருப்பதால் இருள் சூழ்வதற்கு சற்று நேரம் அதிகம் எடுத்துக்கொள்கிறது. குளிர்காலங்களில் மேககூட்டம் அதிகம் காணப்படுவதால் வெளிச்சம் அதிகம் தெரியாமல் விரைவில் இருள் சூழ்ந்து கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஜோதிடர்கள் கூறியதாவது:-

உத்திராயண காலம்

சூரிய பயணத்தை உத்திராயண காலம், தட்சிணாயண காலம் என இருவகைகளாக பிரிக்கப்படுகிறது. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலும் சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் காலம் உத்திராயண காலம் என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை தெற்கு நோக்கி சஞ்சரிக்கும் காலம் தட்சிணாயண காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உத்திராயண காலத்தில் பகல் பொழுது சற்று அதிகமாக இருக்கும்.

சூரியன் உதிப்பது விரைவாகவும், மறைவதற்கு வழக்கத்தை விட சற்று அதிகமான நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது. இந்த காலகட்டத்தில் சுபகாரியங்கள் பகல் பொழுதில் செய்ய ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு ஜோதிடர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.