Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2016

6 வயது மாணவன் அடித்துக்கொலை


ஐதராபாத்தில் 6 வயது மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.



ஐதராபாத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் கார் டிரைவர். இவரது மகன் இப்ராகிம் (6) ஐ.ஏ.எஸ். காலனியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 12-ந்தேதி இப்ராகிமை 3-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தகராறில் பயங்கரமாக தாக்கினான். இதில் இப்ராகிமுக்கு இடுப்பு, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் அருகில் இருந்த சிறிய மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

ஆனால் மறுநாள் இப்ராகிம் வலியால் துடித்தான். உடனே இப்ராகிமை மருத்துவமனையில் சேர்த்தனர். அவன் வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை கண்டு பிடித்த மருத்துவர், தீவிர சிகிச்சை அளித்தும் இப்ராகிம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.