Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2016

ஆந்திராவில் 4 வயது சிறுவனின் உயிரை பறித்த பிளாஸ்டிக் கவர்


ஆந்திரமாநிலத்தில் பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் மூச்சுத் திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் குகட்பள்ளி அருகே உள்ள நிசாம்பேட் பகுதியை சேர்ந்த சிறுவன் ஸ்ரீயான் (வயது 4) சம்பவத்தன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது பிளாஸ்டிக் கவரை எடுத்து, தனது முகத்தில் மூடியுள்ளான். இந்நிலையில் முகத்தில் இறுக்கமாக மூடியதால் கவரை எடுக்க முடியாமல் சிறுவன் திணறி உள்ளான். இதனால் மயக்கம் அடைந்த சிறுவன் கிழே விழுந்துள்ளான். சிறுவனின் சத்தம் கேட்காமல் இருந்ததால் உள்ளே இருந்த பெற்றோர் அலறி அடித்து கொண்டு ஓடி வந்து பார்த்தனர். சிறுவன் கீழே விழுந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் விளையாட்டு இறுதியில் விபரீதத்தில் முடிந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.