Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2016

சிறப்பு வகுப்பு, சத்தான உணவு வகைகள்... மாதிரி அரசுப் பள்ளிகளில் சேர போட்டா போட்டி!


மத்திய அரசின் 'அனைவருக்கும் இடைநிலைக்கல்வி' திட்டத்தின் கீழ்,  தமிழகத்தில் கல்வியில் பின் தங்கிய அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 44 அரசுப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாகத்  தேர்வு செய்யப்பட்டு, அவற்றுடன் மாணவிகள் விடுதிகளும் இயங்கி வருகின்றன.

இந்த மாணவியர் விடுதியில்,  அரசு மாதிரிப் பள்ளியில் படிக்கும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். மேலும் அருகில் உள்ள அரசுப்  பள்ளியில் படிக்கும் மாணவிகளும் இந்த விடுதியில் சேர்க்கப்படுகின்றனர். இந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு சமையல் கலை நிபுணரான தாமு மூலம், விடுதி சமையல்காரர்களுக்கு சிறப்பாக உணவு தயாரிப்பது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு,  தற்போது மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுப்  பட்டியலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 'அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட'த்தின் இயக்குநரான டாக்டர் அறிவொளி கூறுகையில்," மாதிரி அரசுப் பள்ளி மாணவிகளுக்கான இந்த விடுதியில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. இரவில் ஆண்கள் எந்தக்  காரணத்தைக்  கொண்டும் இந்த விடுதிகளில் தங்கக்கூடாது. இரவு வாட்ச்மேனை பொறுத்தவரை வயதானவராக இல்லாமல்,  நல்ல உடல் உறுதியுள்ளவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் விடுதியில், மாணவிகளுக்கு மாலை நேர வகுப்புகள் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகின்றன. வாரத்தின் விடுமுறை நாளில், இவர்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பாடம் தொடர்பான தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் விடுதியில் அவர்களைக்  கண்காணிக்கவும், பாதுகாப்பு ஏற்பாட்டிற்காகவும் விடுதியைச் சுற்றி சி.சி.டி.வி. கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு சத்து மாவுக் கஞ்சி - ஊறுகாய், பொங்கல் - சட்னி,  சேமியா உப்புமா, முட்டை மாசாலா, கருவேப்பிலை சாதம், உருளைக்கிழங்கு மசாலா, மோர், சாம்பார், கத்திரிக்காய், வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி உள்பட 20 வகையான உணவுகள் ஒவ்வொரு கிழமையும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டும்  சிக்கன் வழங்கப்படும். மாலை நேர சிற்றுண்டியாக சுண்டல், வேர்க்கடலை மற்றும் டீ போன்றவை வழங்கப்படும். சிறப்பான கல்வி மற்றும் தரமான வகை வகையான உணவுகள் காரணமாக இந்த மாணவியர் விடுதியில் சேருவதற்கு மாதிரி அரசுப் பள்ளி மற்றும் அரசுப்  பள்ளி மாணவியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. மாணவியர் விடுதிகளுக்கான உணவு மற்றும் சி.சி.டி.வி.,கேமரா போன்றவற்றிற்காக ஆண்டுக்கு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது."என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.