விழுப்புரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் , கெருவம்பாக்கம் பகுதியில் வசித்தவர் சுந்தரராஜன்(40). இவர் சொந்தமாக லாரி டிரான்ஸ்போர்ட் நடத்திவருகிறார்.
புதியதாக வாங்கிய லாரியை குலதெய்வம் கோயிலில் பூஜை செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதலூருக்கு தன் மனைவி மகாலட்சுமி(32), மகள் மதுமிதா (10) டிரைவர் முருகன் (35) மற்றும் உறவினர்கள் லோகநாயகி (60), ஜோதிகா(13) ஆகியோருடன் காரில் சென்றார்.
குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அழுக்கு பாலம் அருகே தூத்துகுடியிலிருந்து மாவு ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி சட்டென வலது பக்கம் கும்பகோணம் சாலையில் திரும்பியது.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் சுந்தரராஜன் ஓட்டிச்சென்ற கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுந்தரராஜன், மகாலட்சுமி, டிரைவர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தகவல் அறிந்த விக்கிரவாண்டி டோல்கேட் ஊழியர்கள் மற்றும் போலீஸார் இடிபாடுகளில் சிக்கிய மதுமிதா, லோகநாயகி, ஜோதிகா அகியோரை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மதுமிதா உயிரிழந்தார்.
படுகாயமடைந்த லோகநாயகி, ஜோதிகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக விக்கிரவாண்டி போலீஸார் வழக்கு பதிந்து , லாரி டிரைவர் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.