Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 31, 2016

வேலையில் இருந்து நிறுத்தியதால் ஆத்திரம் : துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கடைக்காரரின் 3 வயது மகன் கொலை


திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவர் சத்திரம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி பிரபா. இவர்களது குழந்தைகள் சீதானி (9), சிரிஸ் (3).
லட்சுமி பிரபா, வீட்டருகே செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், ரோசிலின் பாக்கியமேரி (23) என்பவர் கடந்த  2 வருடங்களாக பணியில் இருந்தார். ரோசிலின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன் வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர்.

இந்தநிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் லட்சுமிபிரபா கடைக்கு ரோசிலின் சென்றார். அங்கு லட்சுமிபிரபாவிடமிருந்து சிரிசை தூக்கிச் சென்றார். அதன்பின், மதிய உணவுக்கு லட்சுமி பிரபா வீட்டுக்கு சென்றார். மதியம் 2 மணியளவில் சிறுவனை தூக்கி கொண்டு லட்சுமிபிரபா வீட்டுக்கு ரோசிலின் சென்றார். அப்போது, சிரிஸ் தூங்குவதாக கூறி லட்சுமிபிரபாவிடம் கொடுத்து விட்டு சென்றார். இதையடுத்து, மதிய உணவுக்காக சிரிசை எழுப்பியபோது, அசைவின்றி இருந்ததால் லட்சுமிபிரபா பதற்றம் அடைந்தார்.

உடேன, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதனால், அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ``சிறுவனின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது; பிறப்புறுப்பு காயமடைந்துள்ளது; அவன் இறந்து சிலமணிநேரம் ஆகிறது’’ என்று கூறினார்கள். இதற்கிடையில், பாலக்கரை போலீஸ் நிலையத்துக்கு ரோசிலின்மேரி சென்று, 3 வயது குழந்தையை கொன்றதாக கூறி சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: லட்சுமிபிரபா கடை வைத்தது முதல், அங்கு ரோசிலின் வேலைக்கு இருந்தார். இதனால் குழந்தையாக இருந்த சிரிஸ், ரோசிலினிடம் வளர்ந்தான். கடந்த சில நாட்களுக்கு முன் வேலைக்கு வரவேண்டாம் என லட்சுமிபிரபா கூறிவிட்டார். ஆனாலும், தினமும் கடைக்கு செல்லும் ரோசிலின், ஒழுங்காக பழைய மாதிரி என்னிடம் பேச வேண்டும். இல்லை என்றால் உனது மகனை கொன்று விடுவேன் என கூறி மிரட்டியுள்ளார்.

இதனை பெரிதாக கண்டு கொள்ளாத லட்சுமிபிரபா, நேற்று வழக்கம் போல் ரோசிலின் குழந்தையை தூக்கி கொண்டு சென்றதை கண்டு கொள்ளவில்லை. இந்தநிலையில் சிறுவனை கடையின் அருகில் உள்ள கட்டிடத்தின் மாடிக்கு தூக்கிச்சென்ற ரோசிலின், அவனது கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொன்று, பின்னர், அவனின் பிறப்புறுப்பில், சிறிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தி சைக்கோ போல் நடந்துள்ளார். பின்னர், சிறுவன் தூங்குவதாக கூறி கொடுத்துவிட்டு போலீஸ் நிலையம் வந்து சரணடைந்தார். இவ்வாறு போலீசார் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.