Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 27, 2016

ஓரின சேர்க்கைக்கு ஈடுபடுத்தி 3ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை : திருமங்கலம் அருகே கொடூரம்


ஓரின சேர்க்கைக்கு ஈடுபடுத்தி மூன்றாம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (35). பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது மனைவி சித்ரா (29). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள். இதில் அருண்குமார் (8) உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் உச்சப்பட்டிக்கு வந்த அருண்குமார், மாலை 4 மணியளவில் விளையாடிவிட்டு வருவதாக அம்மாவிடம்  கூறி சென்றுள்ளான். வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த அருண்குமார், பிறகு அருகில் கோயிலை ஒட்டிய அரச மரத்தடியில் விளையாடியதை சிலர் பார்த்துள்ளனர். அதன்பின் திடீரென சிறுவன் மாயமானான். இரவு முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில்  சென்று விசாரித்தும் அருண்குமார் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதனால் சுந்தரபாண்டி ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில், உச்சப்பட்டி - திருமங்கலம் ரோட்டில், முனியாண்டிபுரம் அருகே சிறிய பாலத்தின் கீழே நேற்று அதிகாலை முதல் துர்நாற்றம் வீசுவதாக சிலர் உச்சப்பட்டி ஊராட்சி தலைவர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். அவருடன், சுந்தரபாண்டி மற்றும் உறவினர்கள் சென்று அந்த இடத்தில் பார்த்தபோது பாலத்தின் நடுவே பழைய துணியால் போர்த்திய நிலையில் உடல் ஒன்று கிடப்பது தெரிந்தது. ஆஸ்டின்பட்டி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, போர்த்திக் கிடந்த துணிக்குள் சிறுவன் அருண்குமார் நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பது தெரிந்தது.  கழுத்து அறுக்கப்பட்ட காயத்துடன், தலையின் பின்பகுதியில் வெட்டுக்காயமும் இருந்தது. மழையில் ஊறிய நிலையில் சிறுவனின் உடல் இருந்தது. மர்ம உறுப்பிலும், ஆசனவாயிலும் காயங்கள் இருந்தன. சிறுவனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. சிறுவன் உடலை போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வாலிபர் சிக்கினார்: அருண்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உச்சப்பட்டியை  சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்தனர். திருப்பரங்குன்றத்தில்  ஒரு ரகசிய இடத்தில் வைத்து இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர். போலீசார் கூறும்போது, ‘கிராம மக்கள் தகவலின்பேரில்,  சந்தேக நபரின் வீட்டை சுற்றி வளைத்து பிடித்து திருப்பரங்குன்றம் டிஎஸ்பி  ராமசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்’ என்றனர். 3ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thanks To: Dinakaran

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.