July 24, 2016
ஆரணி கோவில் திருவிழாவில் வியாபாரிகள் 3 பேருக்கு கத்திகுத்து
ஆரணியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது, 10 பேர் கொண்ட மர்மகும்பல், வியாபாரிகள் மூன்று பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை பகுதியிலுள்ள ஆடி வெள்ளி வேம்புலியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அப்பகுதியில் வியாபாரிகள் சிறுகடைகளை நிறுவி விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு நடைப்பெற்று வந்த இன்னிசை கச்சேரியின் போது, அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வியாபாரிகளிடம் பணத்தை தராமல் பொருட்களை எடுத்து தகராறில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அக்கும்பல் வியாபாரிகளை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது. இதில் காயமடைந்த சென்னையை சேர்ந்த ரகமதுல்லா, முகமது உசேன் மற்றும் காட்பாடியைச் சேர்ந்த முத்துசாமி ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில், ரகமதுல்லா, முகமது உசேன் இருவரும் வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்த ஆரணி நகர காவல் நிலைய போலீசார், தாக்குதலில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஆரணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவுளி கடை உரிமையாளரை ரவுடிகள் கத்தியால் தாக்கிய சம்பவம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த சம்பவம், ஆரணி பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆரணி கோவில் திருவிழாவில் வியாபாரிகள் 3 பேருக்கு கத்திகுத்து
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.