சென்னை கெல்லீஸ் பகுதியில் அரசு சிறுவர் சீர்திருத்த காப்பகம் இயங்கிவருகிறது. இதில் 340 சிறுவர்கள் தற்போது தங்கிப் படித்து வருகின்றனர். இங்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என கடந்த காலத்தில் பலமுறை புகார்கள் எழுந்தன. அவ்வப்போது இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் தப்பித்து ஓடுவதும் நிகழ்ந்தது. இதில் சிலர் மட்டும் பிடிபடுவதும் எஞ்சியவர் பற்றிய தகவல் முறைப்படி பராமரிக்காமலும் இந்த மையம் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று (10.7.2016) இரவு காப்பகத்தில் தங்கியிருந்த 34 சிறுவர்கள் காம்பவுண்ட் சுவற்றைத் தாண்டிக் குதித்து தப்பித்து ஓடினர். சிறுவர்கள் தப்பிச்சென்ற காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பித்து ஓடுபவர்களை அங்கிருந்த மற்ற சிறார்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு, கல்வீச்சு நடந்தது என்கிறார்கள். அந்த சம்பவங்களை வெளியே இருந்த சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
அந்தக் காட்சிப் பதிவில் சிறார்கள் தப்பித்து ஓடுவது துல்லியமாக பதிவாகியுள்ளது. 'தப்பித்துச் சென்ற சிறார்கள், வெகுதூரம் எங்கும் சென்றிருக்க முடியாது, அருகிலுள்ள பகுதிகளில்தான் இருக்க வேண்டும்' என போலீசார் புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் கார்டன், அரும்பாக்கம் போன்ற சுற்றுப்புறப் பகுதிகளில் அவர்களைத் தேடி வருகின்றனர். இதுகுறித்த தகவல் அறிந்து அந்தப் பகுதியில் ஏராளமான மக்களும் சிறார்களின் பெற்றோர்களும் திரண்டு வந்து விட்டனர். சிறார்கள் தப்பிச்சென்ற தகவல் அறிந்து அங்கு பெற்றோர்கள் திரண்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
" குழந்தைகள் எங்கும் தப்பிச் சென்றிருக்க மாட்டார்கள். நாங்கள் அவர்களை பத்திரமாக பிடித்துக் கொண்டு வந்து விடுவோம், கவலை வேண்டாம்" என்று அவர்களிடம் போலீசார், ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தனர்.
சிறார் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்த மையத்தில் உள்ளவர்களிடம் பேசியபோது, "போதிய மனப்பக்குவம் இல்லாமையால் சிறு சிறு குற்றங்களை செய்துவிடும் பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறார்கள், இங்கே தங்க வைக்கப்படுகின்றனர். இது அவர்களை பக்குவப்படுத்தி புது மனிதனாக, தன்னம்பிக்கையூட்டும் இடமாகச் செயல்படுகிறது. சிறு பிள்ளைகள், அவர்களின் குணம் அப்படித்தான் இருக்கும். வருங்காலங்களில் இன்னும் பாதுகாப்பை பலப்படுத்தி இனி இவ்வாறு நடக்காதபடி நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.