July 21, 2016
சிறையில் 30 காவலர்கள் தன்னை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததாக பியூஸ் மனுஷ் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார். - வீடியோ இணைப்பு
சேலம் மத்திய சிறையில் இருந்து 2 வாரங்களுக்கு பின்னர் சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சிறையில் காவலர்களால் தாம் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் பியூஸ் மனுஷ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சேலம் முள்ளுவாடி ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை நிலம் கையகப்படுத்திய பின்னர் தொடங்க வேண்டும் என்று கூறி பணிகளை தடுத்ததாக சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் உள்ளிட்ட 3 பேர் கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், கைதான கார்த்தி, முத்துச் செல்வம் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மருத்துவ காரணங்கள் அடிப்படையில் பியூஸ் மனுஷுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிதமன்றம் பியூஸ் மானுஷ்-க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் மானுஷ், சிறையில் 30 காவலர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதாக கண்ணீர் மல்க குற்றம்சாட்டினார்.
சிறைத்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறிய பியூஸ் மானுஷ், தமக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நேரக் கூடாது என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சேலம் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியான பியூஸ் மனுஷ் சிறை வளாகத்தில் கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் மனுஷ், காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டினார். சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரும் கண்மூடித்தனமாக தன்னை தாக்கியதாக பியூஸ் மனுஷ் புகார் தெரிவித்துள்ளார்.
”20க்கும் மேற்பட்ட காவலர்கள் சிறையில் என்னை நிர்வாணமாக்கி காலணி அணிந்திருந்த காலால் மிதித்து சித்ரவதை செய்ததுடன், அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி நீக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். காதில் தாக்கினர். இருட்டறையில் தங்க வைத்ததுடன், போர்வை கூட வழங்கவில்லை” என்று பியூஸ் மனுஷ் தெரிவித்தார்.
பூமியை காக்கும் பணியில் ஈடுபட்டதற்காக கொடுக்கப்படும் பரிசா இந்த தாக்குதல் என்று கேள்வி எழுப்பிய பியூஸ் மனுஷ், தன் மீதான தாக்குதலுக்கு என்ன காரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். சேலத்தில் மேம்பால பணியை ஒருபோதும் தடுத்து நிறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
1997 முதல் இன்று வரை மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ள தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பியூஸ் மனுஷ் வலியுறுத்தினார். சிறையில் நடந்த சித்ரவதைகளை வெளியே கூறக்கூடாது என தன்னை காவலர்கள் எச்சரித்ததாகவும் பியூஸ் மனுஷ் புகார் தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் யாரையேனும் தான் விமர்சித்து எழுதியிருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்த மனுஷ், தனது சமூக பணிகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.
சிறையில் 30 காவலர்கள் தன்னை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததாக பியூஸ் மனுஷ் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார். - வீடியோ இணைப்பு
Reviewed by மறத்தமிழன்
on
July 21, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.