Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2016

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்கிட்டுத் தற்கொலை



மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி தேவராஜின் மனைவி, மகள்கள் உள்ளிட்ட மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சிதம்பரம் மேலப்பூதரையை சேர்ந்த ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி தேவராஜ் சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதனை அடுத்து அவர் சிறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தேவராஜின் குடும்பத்தினர் நேற்று இரவு சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள உறவினர் வீட்டில் தேவராஜின் மனைவி உஷாராணி மற்றும் அவரது மகள்கள் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.