பெரம்பூரில் விஷவாயு தாக்கி பலியான 3 தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ஓட்டல் நிர்வாகம் சார்பில் தலா ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டது.
விஷவாயு தாக்கி பலி
பெரம்பூர் திருவேங்கடம் சாலை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே பிரபல ஓட்டல் சங்கீதா இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் தரைக்கு கீழே உள்ள குடிநீர் தொட்டியை ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ராமகிருஷ்ணன் (வயது 24), வினய் (23), சதீஷ் (21) ஆகியோர் நேற்றுமுன்தினம் சுத்தம் செய்வதற்காக இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தொட்டியில் விஷவாயு பரவி இருந்ததால் பிணங்களை மீட்க செம்பியம், வியாசர்பாடி தீயணைப்பு வீரர்களை வரவழைத்தனர். தீயணைப்பு வீரர்கள், விஷவாயுவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலா ரூ.15 லட்சம்
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் மோகன்ராவ் (55), மேலாளர் கோபி (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்கு பிறகு சொந்த ஊரான விஜயநகரத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் இறந்து போன ராமகிருஷ்ணன், வினய் மற்றும் சதீஷ் ஆகியோரின் குடும்பத்திற்கு ஓட்டல் நிர்வாகம் சார்பில் தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.45 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.