July 31, 2016
சிறுமியிடம் சில்மிஷம்: ஏர்லைன்ஸ் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
ஆலந்தூர்: மீனம்பாக்கம் ஏர் இந்தியா குடியிருப்பில் வசிப்பவர் அசோக் (54), ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர். கடந்த 2013ம் ஆண்டு, இவர் தனது எதிர் வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
ஆலந்தூர் விரைவு நீதிபதி சுல்தான் ஆர்மின் தீர்ப்பில் கூறியதாவது, ‘சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதற்காக அசோக்கிற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனை அடுத்து மீனம்பாக்கம் போலீசார் அசோக்கை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சிறுமியிடம் சில்மிஷம்: ஏர்லைன்ஸ் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
Reviewed by மறத்தமிழன்
on
July 31, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.