Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2016

ரூ.25 லட்சம் இருந்தால் தான் கவுன்சிலர் 'சீட்': மா.செ.,க்கள் அறிவிப்பால் கட்சியினர் கலக்கம்


'மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், 25 லட்சம் ரூபாயை வைத்திருக்க வேண்டும்' என, கட்சியினருக்கு மாவட்ட செயலர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என, சட்டசபையில் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இருந்த போதும், தற்போதே, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தும் பணியில் இறங்கி விட்டன. எப்படியாவது, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு கட்சிகளும் உள்ளன.
கட்சி தலைமைஇப்படி இரண்டு கட்சியினரும், உள்ளாட்சி தேர்தல் வெற்றியில் தீவிரமாக இருப்பதால், 'தேர்தலில் போட்டியிட விரும்பும் கவுன்சிலர்கள், பல லட்சம் ரூபாயை கையில் வைத்திருக்க வேண்டும்' என, சொல்லத் துவங்கி உள்ளனர்.

குறிப்பாக, மாவட்ட செயலர்களாக இருப்பவர்கள், கட்சியினரிடம் இதை, ஆழமாக பதிய வைக்கின்றனர். கட்சி தலைமை அறிவுறுத்தலின் பேரிலேயே அவர்கள், இப்படி அறிவுறுத்துவதாக தெரிகிறது.
தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இரு கட்சிகள்சார்பிலும், தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டங்கள் நடக்கின்றன. அதன்மூலம், மாவட்ட செயலர்கள், தலைமையின் எதிர்பார்ப்பை வலியுறுத்தி வருகின்றனர்.திருச்சி மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, அ.தி.மு.க., சார்பில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:

உள்ளாட்சி தேர்தல் என்றாலும், வெற்றியை கட்டாயம் பெற வேண்டும் என்றால், செலவுகள் குறித்து கவலைப்படக் கூடாது. அதற்கு, போட்டியிட விரும்புகிறவர்கள் தாராளமாக செலவு செய்பவர்களாக இருக்க வேண்டும். கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தான், பின் மேயராகும் வாய்ப்பு கிடைக்கும்.


வாய்ப்பிருக்காது


அதனால், மாநகராட்சி தேர்தலில், கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளராக வேண்டும் என்றால், குறைந்தபட்சம் ௨௫ லட்சம் ரூபாயை கையில் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்காது.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.தி.மு.க.,வின் திருச்சி தெற்கு மாவட்ட செயலராக இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும், கட்சியினரிடம் இதையே வலியுறுத்தி பேசிஉள்ளார்.

இதே போலவே, தமிழகத்தின் பல பகுதிகளிலும், கட்சியினரிடம் மா.செ.,க்கள் வலியுறுத்தி கூறியுள்ளனர்.இதற்கு பல இடங்களில், கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'பணம் மட்டுமே, உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தந்து விடாது. வேட்பாளரின் தகுதி, மக்கள் மத்தியில் உள்ள அறிமுகம்; கட்சியின் மீதான மக்கள் நம்பிக்கை ஆகியவை தான் தீர்மானிக்கும்' என கோஷமிட்டுள்ளனர்.இருந்த போதும், கட்சிகளின் மா.செ.,க்கள் தொடர்ந்து பணத்தையே வலியுறுத்துவதால், கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.