சென்னை மற்றும் புறநகரில் 25 ரயில் நிலையங்கள் பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்டு இருப்பதாகவும், அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்தும், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில், 25 ரயில் நிலையங்கள் பதற்றமான நிலையங்களாக கண்டறியப்பட்டு உள்ளன . அடுத்தகட்ட நடவடிக்கையாக அந்த ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ''சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மொத்தம் 18 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இதில் 16 ரயில் நிலையங்களும், பறக்கும் ரயில் நிலையங்களில் வேளச்சேரி, இந்திராநகர், பூங்கா நகர் ரயில் நிலையங்களும், சென்ட்ரல் மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் ஆவடி, பெரம்பூர், நெமிலிச்சேரி ரயில் நிலையங்களும், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே உள்ள ரயில் நிலையங்களில் கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய ரயில் நிலையங்களும் பதற்றமான ரயில் நிலையங்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த ரயில் நிலையங்களில் அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரையிலும், அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ரயில் நிலையத்தில் உள்ள ஒரு நடைமேடைக்கு 4 கேமராக்கள் வீதம் பொருத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன" என்று தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், " ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், ரயில் நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் பகுதியை மட்டும் பயன்படுத்தினால் அவர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். ஆனால், சில பயணிகள் குறுக்குப் பாதையில் செல்கின்றனர். இது ஆபத்தில் முடியலாம். ஆகவே பயணிகளும் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றும் அறிவுறுத்தினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.