July 20, 2016
2000 முறை பலாத்காரம் செய்யப்பட்டேன்: ஆண்கள் சிறையில் திருநங்கைக்கு நடந்த கொடுமை
ஆஸ்திரேலியாவில் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்ட திருநங்கை ஒருவர் 2000 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கார் திருட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டைனை பெற்ற திருநங்கை ஒருவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் உள்ள ஒரு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது தான் சிறையில் அனுபவித்த கொடுமைகளை விவரித்துள்ளார்.
திருநங்கையாகிய என்னை பெண்கள் சிறையில் தான் அடைத்திருக்க வேண்டும். ஆனால் என்னை ஆண்கள் சிறையில் அடைத்தனர். சிறைக்க அடைக்கப்பட்ட சில மணி நேரங்களில் என்னை பலாத்காரம் செய்ய ஆரம்பித்தனர். சிறையில் என்னுடைய தண்டனை காலம் முடியும் வரை பலாத்காரம் செய்து கொண்டு தான் இருந்தார்கள்.
பல்வேறு சிறைகளில் மாற்றப்பட்ட என்னை 2000 முறை பலாத்காரம் செய்தனர். ஆண் கைதிகள் என்னை மிரட்டி பலவந்தமாக பலாத்காரம் செய்து, என்னை அடித்து துன்புறுத்தினர். அவர்களை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
சிறையில் நரக வேதனை அனுபவித்ததாக குறிப்பிட்ட அந்த திருநங்கை நாங்களும் மனிதர்கள் தானே என உருக்கமாக பேசினார்.
2000 முறை பலாத்காரம் செய்யப்பட்டேன்: ஆண்கள் சிறையில் திருநங்கைக்கு நடந்த கொடுமை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.