வேலூர் அருகே 2½ வயது சிறுவன் ஒருவன் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து நீச்சலடித்து ஆனந்த குளியல் போடுவது அப்பகுதி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர் அருகே உள்ள மேல்மொணவூர் கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சுவீட் கடை வைத்துள்ளார். இவருடைய மகன் அஸ்வின் (வயது 2½) வீட்டில் துள்ளி விளையாடும் இந்த சிறுவன் தினமும் அவர்களுக்கு சொந்தமான 60 அடி ஆழ விவசாய கிணற்றில் குதித்து ஆனந்தமாக நீச்சலடித்து குளிக்கிறான்.
2½ வயதில் 60 அடி ஆழ தண்ணீரில் சிறுவன் குளிப்பது அப்பகுதி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தினமும் 1 மணிநேரம் வரை கிணற்றில் குளித்து நீச்சலடித்து வருவதாக கூறுகின்றனர்.
இது குறித்து சிறுவனின் தந்தை அங்கமுத்து கூறியதாவது:-

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் நீச்சல் தெரியும். சிறுவயதில் அனைவரும் நீச்சல் கற்றுக் கொண்டோம். என் மகன் அஸ்வின் 2 வயதிலேயே என்னுடன் குளிக்க வர ஆரம்பித்தான்.
அப்போது கயிறுகட்டி கிணற்றுக்குள் நீச்சல் கற்றுக் கொடுத்தேன். பின்னர் 5 கிலோ கேனில் கட்டிப்போட்டு கிணற்றில் நீச்சல் பழக்கினேன். கடந்த 1 மாதங்களுக்கு முன்பு அவன் நன்றாக நீச்சல் கற்றுக் கொண்டான்.
எந்த பயமும் இல்லாமல் கிணற்றில் குதித்து ஆனந்தமாக குளிக்கிறான். எங்கள் வீட்டில் உள்ளவர்கள் 6 வயதுக்கு பிறகு தான் நீச்சல் கற்றோம். ஆனால் 2½ வயதிலேயே என் மகன் நீச்சல் அடிப்பது எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது. அடுத்து ஆண்டுதான் அவனை நான் பள்ளியில் சேர்க்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் வந்தது. இதில் குளித்த 40-க்கும் மேற்பட்டோர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள்.
ஆனால் 2½ வயதில் சிறுவன் ஒருவன் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து நீச்சலடித்து ஆனந்த குளியல் போடுவது அப்பகுதி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவன் குளிப்பதை வியந்து பார்த்து செல்கின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.