Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2016

ராணுவ புரட்சிக்கு ஆதரவளித்த 2 ஆயிரத்து 750 நீதிபதிகள் கைது – 8 ஆயிரம் காவல்துறையினர் பதவி நீக்கம்



அங்காரா, ஜுலை 18- துருக்கியில் ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்த 2 ஆயிரத்து 750 நீதிபதிகளும், 8 ஆயிரம் காவல்துறையினரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா. நீதிபதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 3 ஆயிரம் ராணுவத்தினர் கைது செய்யப்பட்டனா.
துருக்கியில் கடந்த 15-ந் தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவ புரட்சியில் ஈடுபட்டனர். அதனை ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து முறியடித்தனர். புரட்சியில் ஈடுபட்டதாக 3,000 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். நீதித் துறையிலும் பலர் புரட்சிக்கு ஆதரவு அளித்தனர். புரட்சிக்கு ஆதரவு தெரிவித்த 2 ஆயிரத்து 750 நீதிபதிகள் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் 9 ஆயிரம் அரசு அதிகாரிகள பதவியில் இருந்து தூக்கப்பட்டு உள்ளனர். ஒரு மாகாண கவர்னர், 29 நகர கவர்னர்கள், மற்றும்  8777 பொது பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலனே ராணுவ புரட்சிக்கு காரணம் என்று அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். அவரை துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெதுல்லாவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை அளித்தால் மட்டுமே எர்டோகனின் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளம் துருக்கியில் உள்ள நிலையில் அங்கு நடந்துள்ள திடீர் ராணுவ கலகத்தின் பின்னணியில் அமெரிக்காவின் கரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடேயே துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, பிரான்சின் நீஸ் நகரத்தில் நடந்த ஐஎஸ் தீவிரவாதத் தாக்குதல் ஆகியவற்றின் பிந்தைய நிலைமைகளை கலந்தாய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் விரைவில் பிரஸல்ஸில் கூட்டம் நடத்தவுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.