வங்காளதேசத்தின் டாக்கா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் பலியாகி இருப்பது தெரிய வந்து இருக்கிறது. அவருடைய பெயர் தருஷி ஜெயின்(வயது 19). இவர் அமெரிக்காவின் பெர்கிலே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவி ஆவார். இவருடைய தந்தை சஞ்சீவ் ஜெயின் டாக்காவில் வசித்து வருகிறார். விடுமுறையில் தந்தையை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு தருஷி ஜெயின் டாக்கா வந்துள்ளார்.
நேற்று இரவு ‘ஹோலே ஆர்டிசன் பேக்கரி‘யில் சாப்பிடுவதற்காக சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவரும் சிக்கிக்கொண்டு பரிதாபமாக உயிர் இழந்துவிட்டார்.
தருஷி ஜெயின் கொல்லப்பட்டது குறித்து மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் பதவில்,
“பயங்கரவாதிகளின் தாக்குதலில் மாணவி தருஷி பலியான தகவல் அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்-. தருஷியின் தந்தையிடம் தொடர்பு கொண்டு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தேன். இந்த துயரமான தருணத்தில் நாடு அவருக்கு உறுதுணையாக இருக்கும்“
என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.