July 10, 2016
சவுகார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 19 லட்சம் திருட்டு: விசாரணை முடுக்கம்
சென்னை சவுகார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 19 லட்சம் ரூபாய் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் சுரேந்தர் போத்ரா வீட்டுக்கு வயரிங் வேலை செய்வதற்கு எண்ணூரை சேர்ந்த சரவணன், சுதாகர் மற்றும் நவிந்தர் ஆகிய 3 பேர் வந்துள்ளனர். பணியில் இருந்த அவர்கள், பீரோவில் இருந்த 19 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 11 லட்சம் ரொக்கப்பணம், ஒரு வேன், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவான சரவணனின் மனைவி சுதாவையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
சவுகார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 19 லட்சம் திருட்டு: விசாரணை முடுக்கம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.