Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 27, 2016

14 வயதுக்கு உட்பட்டோரை பணிக்கு அமர்த்துவோருக்கு 3 ஆண்டுகள் சிறை!



14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.
குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில்  திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா கடந்த  19–ந்தேதி மாநிலங்களவையில் நிறைவேறியது.  இதையடுத்து  நேற்று அந்த மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 
புதிய மசோதாவின்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.  14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுவரை சிறை  தண்டனையோ அல்லது 20 ஆயிரம் ரூபாய்  முதல் 50 ஆயிரம்வரை  அபராதமோ அல்லது  இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
இரண்டாவது முறையாக அந்த குற்றத்தை செய்பவர்கள் ஓராண்டு முதல்  முதல் 3 ஆண்டுவரை சிறை தண்டனை பெறுவர். எனினும்  பள்ளி நேரம் முடிந்த பிறகு, தன் குடும்பத்துக்கு உதவியாக வயல்களிலோ, குடிசைத்தொழில்களிலோ, காட்டில் பொருட்கள் சேகரிப்பதிலோ அல்லது விடுமுறை காலத்தில் தொழிற்கல்வி பயில்வதிலோ குழந்தைகள் ஈடுபடலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த அம்சம் மறைமுகமாக குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சி என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.