July 27, 2016
13 வயது சிறுமியை 6 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி திருமணம் செய்தவர்
மும்பையில் 13 வயது சிறுமி ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அவள் அளித்துள்ள புகாரில், லட்ச்கராம் கிரிபாரம் சவுத்ரி என்ற நபர் (வயது 35) எனது தந்தையிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து என்னை விலைக்கு வாங்கிகொண்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை திருமணம் செய்துகொண்ட அவர், ஒரு வருடமாக என்னை சித்ரவதை செய்து வருகிறார், பாலியல் தொல்லை கொடுப்பது, அவர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்றால் அடித்து கொடுமைபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டார். என கூறி உள்ளார். தனது உடலில் ஏற்பட்டு உள்ள காயங்களையும் காட்டி உள்ளார்.
உடலில் ஏற்பட்ட காயங்களையும் காட்டியுள்ளார்.
இது குறித்து லட்ச்கராம் கிரிபாரம் சவுத்ரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறியது, அப்பெண் மீது எனக்கு முழு உரிமையும் உள்ளது. ஏனெனில், ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் ரங்கம் என்ற இடத்திலிருந்து அவள் பெற்றோரிடமிருந்து 6.3 லட்ச ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியதோடு மட்டுமல்லால் அதற்கான பத்திரத்தையும் போலீசாரிம் காட்டியுள்ளார்.
அந்த பத்திரத்தில் அச்சிறுமியின் வயது 20 என்று அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். தற்போது மருத்துவ சோதனைக்கு உட்படுத்த அச்சிறுமியின் தற்போதைய வயது 14 என தெரியவந்துள்ளது, மேலும் சவுத்ரி மீது, பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
13 வயது சிறுமியை 6 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி திருமணம் செய்தவர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.