July 20, 2016
டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு உ.பி. கோர்ட் நோட்டீஸ்
உலகின் முதல் 10 குற்றவாளிகள் என்று கூகுள் தேடுபொறியில் டைப் அடித்தவுடன் அதில் பிரதமர் மோடியின் பெயரையும் காட்டும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா என்பவர் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சுஷில் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், கூகுளின் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் ஒருவர் என பிரதமர் மோடியை படத்துடன் வெளியிட்டது. இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை அணுகினேன் என்று தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவின் மீது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். தற்போது சீராய்வில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Thanks To: Dinakaran
டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு உ.பி. கோர்ட் நோட்டீஸ்
Reviewed by மறத்தமிழன்
on
July 20, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.