Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 26, 2016

100க்கும் மேற்பட்ட சிறுமிகளுடன் உறவு கொண்ட சாமியார்!



டர்பன்: கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலாவியில் சாமியார் ஒருவர் 100க்கும் மேற்பட்ட சிறுமிகளுடன் உறவு கொண்டுள்ள வினோதம் நடந்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலாவியில் ஒரு வினோதமான பழக்கம் உள்ளது. அந்நாட்டில் வசிக்கும் பெண்கள் தங்களின் இளம் வயது மகள்களை உடல் ரீதியாக தூய்மைப்படுத்தும் வகையில் முன்பின் அறியாத ஒருவருடன் உறவு கொள்ள வைக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மாலாவியின் பல்வேறு பகுதிகளில் இந்த வினோத பழக்கம் உள்ளதாம். இந்நிலையில் மாலாவியை சேர்ந்த சாமியார் ஒருவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

சாமியார்
நான் இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன். அதில் சில சிறுமிகள் 12 முதல் 13 வயது வரை உள்ளவர்கள். அவர்களை தூய்மைப்படுத்தவே நான் உறவு கொள்கிறேன்.

அம்மாக்களே
சிறுமிகளுடன் உறவு கொண்டு அவர்களை தூய்மைப்படுத்துமாறு அவர்களின் தாய்மார்களே எனக்கு பணம் அளிப்பார்கள். ஒரு சிறுமியுடன் உறவு கொள்ள ரூ.450 வரை எனக்கு கிடைக்கும்.

பலாத்காரமும்
தூய்மை அடைய விரும்புவதால் சிறுமிகள் என்னை அவர்களுடன் உறவு கொள்ள அனுமதிப்பார்கள். ஆனால் சிலர் என்னை அவர்களை தொட விட மாட்டார்கள். அப்போது நான் அவர்களுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்வேன்.

விதவைகள் கூட
சிறுமிகள் மட்டும் அல்ல விதவைகளுடனும் உறவு கொண்டு வருகிறேன். அவர்களை தூய்மை அடைய வைக்க அவர்களின் கணவரின் இறுதிச் சடங்கு நடக்கும் முன்பு அவர்களுடன் உறவு கொள்வேன். இப்படி நான் சிறுமிகள், விதவைகளுடன் உறவு கொள்வதால் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கம் ஏற்பட்டு, எதிர்காலத்தில் நல்ல மனைவிகளாக இருப்பார்கள் மேலும் கணவனின் ஆசையை பூர்த்தி செய்வார்கள் என்கிறார் சாமியார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.