அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ளது மினியாபோலிஸ் நகர் இங்கு சம்பவத்தன்று இரவு லாவிஸ் ரினோல்ட்ஸ் என்ற பெண் தனது காதலனுடன் காரில் பயணம் செய்துள்ளார்.
லாவிஸ் காரை ஓட்ட அருகில் அவரது காதலன் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, காரில் உள்ள விளக்கு ஒன்று உடைந்திருந்ததை பார்த்த போலீசார் ஒருவர் காரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
காதலனை பார்த்த அந்த போலீசார் ‘உங்களுடைய லைசென்ஸ் மற்றும் அடையாள அட்டையை காட்டுக்கங்கள்’ எனக் கேட்டுள்ளார்.அப்போது, ‘அவரிடம் துப்பாக்கி இருக்கிறது. அதை எடுத்துச் செல்ல அவருக்கு அனுமதியும் இருக்கிறது’ என அருகில் அமர்ந்திருந்த காதலி கூறியுள்ளார்.
இச்சூழலில் காதலன் லைசென்ஸை எடுக்க கைகளை சட்டைக்குள் நுழைத்துள்ளார்.‘நபர் துப்பாக்கியை தான் எடுக்கிறார்’ என அச்சமுற்ற போலீசார் அவரை நோக்கி 4 முறை சரமாரியாக சுட்டுத்தள்ளுகிறார்.
இந்த கொடூர காட்சியை கண்ட காதலி உடனடியாக பேஸ்புக்கில் உள்ள வீடியோ வசதியை பயன்படுத்தி தனது காதலன் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை நேரடியாக வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் நிகழ்ந்து ஓரிரு நிமிடங்களில் காதலன் உயிரிழந்து விடுகிறார். பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்த நூற்றுக்கணக்கான நபர்கள் அதிகாலை 3 மணியளவில் மினிசோட்டா ஆளுநர் மாளிகை முன்னிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வாலிபரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி தற்போது விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த் துப்பாக்கி சூட்டை கண்டித்து டல்லாஸ் நகரில் பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது திடீரென அங்குள்ள சில கட்டிடங்களில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் போலீசை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 4 போலீஸார் பலியாகினர்.
துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இரு போலீசாருக்குஅறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. மேலும் 3 போலீஸார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
போலீசாருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியில், போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தொடர்புடைய ஒருவரின் புகைப்படத்தை டல்லாஸ் போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை கைப்பற்றியுள்ளனர். இதில் தொடர்புடைய மற்றவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.