தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்னும் மீளவில்லை என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்து உள்ளார்.
கடலூர் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''திருப்பூரில் சிறு மளிகைக்கடையை நடத்திக் கொண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை பாராட்டலாம். எனினும் தீவிரவாத நடவடிக்கையை தமிழக அரசு தாமாக முன்வந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமாக தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டமன்றத் தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அவரது அறிக்கைகளில் விரக்தி மட்டுமே தெரிகிறது. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைத்துவிடும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த கருணாநிதி, தற்போது தோல்விக்கு புதிய காரணங்களை கண்டுபிடித்து வருகிறார். மத்திய அரசு ஆதரவு அளித்ததால் தான் அ.தி.மு.க. ஆட்சி அமைத்துள்ளது என்று கூறி வருகிறார். இது அவரது விரக்தியின் வெளிப்பாடு தான்.
மத்திய அரசு சில பணிகளை ஆரவாரம் இல்லாமல் செய்து முடித்துள்ளது. மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை சென்னை ஹைகோர்ட் என பெயர் மாற்றுதல், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்குவதற்கான சட்டத்திருத்தம் ஆகியவை பா.ஜ.க.வால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும். ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் நிறைவு பெறாது. பொங்கல் இல்லாமல் தமிழர்களின் பண்பாடும் நிறைவடையாது.
நதி நீர் இணைப்புக் குறித்து பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் அதனை நிறைவேற்ற தீவிரமாக உள்ளோம். விந்திய மலைக்கு தெற்கில் மகாநதி கோதாவரியுடனும், கோதாவரி, கிருஷ்ணாவுடனும் இணைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கிருஷ்ணா நதி, காவிரியுடன் இணைக்கப்படுவதில் தான் தாமதம் ஏற்படுகிறது. ஏனெனில், தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்தால் தான் கிருஷ்ணா நதி, காவிரியுடன் இணையும். அப்போது அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க வழி ஏற்படும். இல்லையெனில் தண்ணீர் வீணாகக் கடலுக்குத்தான் செல்லும்.
இலங்கை அரசுடன் மோடி மேற்கொண்டு வரும் முயற்சியினால் இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.