Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2016

ராமதாஸ் மருத்துவராகக் காரணம் காமராஜர்! - ஆச்சர்ய தகவல்


 காமராஜரால்தான் தன்னால் மருத்துவம் படிக்க முடிந்தது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

காமராஜரின் 114-வது பிறந்த நாள் விழா கல்வித் திருவிழாவாக விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய டாக்டர் ராமதாஸ், “நான் மருத்துவராகக் காரணம் காமராஜர்தான். மருத்துவப் படிப்பில் நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம்பெற்ற ஒருவர் எனக்கு மருத்துவ சீட் கிடைக்கவேண்டுமானால் நான் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டார். அப்போது அது பெரிய தொகை என்பதால், அவ்வளவு தொகை இல்லை என்னிடம் இல்லை எனக் கூறிவிட்டேன். இதனால் எனக்கு சீட் கிடைக்காது என துயரமடைந்தேன்.

ஆனால் அடுத்த நாள் நான் நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது பணம் கேட்ட நபர் அங்கு இல்லை. விசாரித்தபோது, அந்த நபர்  என்னைப் போல் பலரிடமும் லஞ்சம் கேட்டதாகவும் அந்தத் தகவல் அப்போதைய முதல்வர் காமராஜருக்கும் சென்றதையடுத்து கோபப்பட்ட காமராஜர், குறிப்பிட்ட அந்த நபரை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டார் எனவும் தெரியவந்தது.



அதன்பின் நேர்மையாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டதால் எனக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு உள்ள தொழிற்சாலைகள், நீர்த்தேக்கங்கள், அணைகள் அனைத்தும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கப்பட்டன” என்றார்.

கனிமொழி எம்பி பேசும்போது, “கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறச் செய்தவர் காமராஜர். அதனால்தான் தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை இன்று உயர்ந்துள்ளது. கல்வி மட்டுமல்லாது மதிய உணவு திட்டத்தையும் காமராஜர் கொண்டு வந்தார். நாடு முழுவதும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்துக்கு மத்திய அரசு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.