ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. கடந்த ஆண்டு, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் அன்றைய தினம் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 2-வது ஆண்டாக, இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட 135-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் யோகா பயிற்சி நடைபெறுகிறது. அதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கிவைக்கிறார். நிகழ்ச்சியில், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், டெல்லி போலீஸ் அதிகாரிகள், இந்தோ-திபெத்திய எல்லை போலீசார், ஜனாதிபதியின் மெய்க்காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பிரதமர் மோடி, பொதுமக்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி, சண்டிகாரில் நடைபெறுகிறது. அதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக, 150 மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொள்கிறார்கள். காலை 7 மணிக்கு தொடங்கும் பயிற்சி, 7.45 மணிக்கு முடிவடைகிறது.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதில் பங்கேற்று, சிறப்பாக ஆசனம் செய்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.8 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். எனவே, பங்கேற்பாளர்கள், தாங்கள் யோகா செய்வதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடலாம். ‘செல்பி’ எடுப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே 300 பசுமை கழிப்பறைகளும், 300 குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், சண்டிகார் யூனியன் பிரதேச கவர்னர் கபதன் சிங் சோலங்கி, பஞ்சாப், அரியானா முதல்-மந்திரிகள் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சண்டிகார் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில், மத்திய அரசும், டெல்லி மாநகராட்சியும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நாடு முழுவதும் நடக்கும் யோகா பயிற்சிகளில், பதஞ்சலி யோகா பீடம், வாழும் கலை அறக்கட்டளை, பிரஜாபிதா பிரம்ம குமாரி ஐஸ்வரிய வித்யாலயா போன்ற அமைப்புகளின் தன்னார்வ தொண்டர்கள், மத்திய துணை ராணுவப்படையினர், முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கிறார்கள்.
இதுதவிர, உலகம் முழுவதும் 173 இந்திய தூதரகங்கள், யோகா குறித்த விழிப்புணர்ச்சியை பரப்ப யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
பிரதமர் மோடி நேற்று சூரிய நமஸ்காரம் பற்றிய தபால்தலையை வெளியிட்டார்.
இந்த ஆண்டு யோகா பயிற்சிக்கான ‘தீம் பாடல்’ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 3 நிமிடம் 15 வினாடிகள் ஓடும் அந்த பாடலை தீரஜ் சரஸ்வத் எழுதி உருவாக்கி உள்ளார்.
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.