Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

உலகத்திலேயே அதிக செலவில் மாஸ்கோவில் பிரமாண்ட திருமணம்: மணமகள் ஆடை ரூ. 1.30 கோடி


இரு மனம் இணையும் திருமணம் என்பது தற்போது அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப மாறுபட்ட மற்றும் வித்தியாசமான முறையில்  நடந்தேறுவது வாடிக்கையாகிவிட்டது. விமானத்தில் பறந்தபடி திருமணம், கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம், ரயிலில் திருமணம் என சிலர்  வித்தியாசமான இடங்களை தேடி திருமணத்தை நடத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்துவார்கள். இதுபோன்று ரஷ்யாவில் நடந்த ஒரு திருமணம் ஆச்சரியத்தை  மட்டுமல்லாது பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்தின் புகைப்படங்களை பார்ப்பவர்கள் அதிலிருக்கும் பிரமாண்டத்தை பார்த்து வாயடைத்து போய்விடுகிறார்கள் எனலாம். பிரமாண்டத்துக்கான  செலவு எவ்வளவு என்பதை கேட்டால் நம்மில் பலருக்கு மயக்கமே வந்துவிடும். இத்திருமணத்திற்கான செலவு சுமார் ரூ.6600 கோடி தான் என்றால்  நம்புவீர்களா?

* ரஷ்ய கோடீஸ்வரர் சாமுவேல் கராப்தியன் தனது இளையமகனுக்கு இவ்வளவு பெரிய செலவில் பிரமாண்டமாக திருமணத்தை செய்து வைத்துள்ளார்.
* ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த இந்த திருமணம், உலகிலேயே மிகஅதிக பொருட் செலவில் நடந்த திருமணம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
* சாமுவேல் கராப்தியனின் பெயர் ரஷ்யாவில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் 28 இடத்தில் இடம்பெற்றுள்ளது. இவரது மகன் சர்கிஸ் கராப்தியன்.  பிரமாண்ட திருமணத்தின் மணமகன் இவர்தான். மணமகள் பெயர் சலோமி கிண்ட்சாராஸ்விலி. மாஸ்கோவில் உள்ள மிக பிரபலமான சபிஷா  ரெஸ்டாரண்டில்தான் இந்த பிரமாண்ட திருமணம் நடந்தது.
* இந்த திருமணத்தில் மணமகளுக்காக பிரத்யேகமாகவும், வித்தியாசமானதாகவும் 3 வகையான ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிரபல ஆடை  வடிவமைப்பாளரான அலெசாண்டரா ரிச் என்பவர் இவற்றை வடிவமைத்து இருந்தார். ஆடையின் மதிப்பு 1.3 கோடி ரூபாயாகும்.
* வரவேற்பு அறையில் 500 விருந்தினர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மிகப்பெரிய தொங்கும் விளக்கு மற்றும் பல நிறங்களிலான  சர விளக்குகள் மாயாஜால உலகில் இருப்பதை போன்ற உணர்வை கொடுத்தன. அந்த இடம் ஊதா நிற விளக்குகள் ஒளியில் மூழ்கியிருந்தது.
* வெள்ளை நிறப்பூக்கள் பூத்திருப்பது போன்று 9 அடுக்குகளை கொண்டதாய் உருவாக்கப்பட்டிருந்த திருமண கேக் தொங்கும் விளக்கை தொடும் உயரத்தில்  செய்யப்பட்டுஇருந்தது.
* நுழைவு வாயில் மாயாஜால உலகிற்குள் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
*  இருபுறத்திலும் செயற்கை மரங்களும் அதில் ஆயிரக்கணக்கான இயற்கை மலர்களும்  அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இயற்கையான மரங்களை போன்று  தத்ரூபமாக இருந்த இவை  திருமணத்திற்கு வந்தவர்ளை வரவேற்கும் வகையில் அழகுற அமைக்கப்பட்டிருந்தது.
* மணமக்களுக்கு பின்புறத்தில் பல்லாயிரக்கணக்கான மலர்களை கொண்டு  உருவாக்கப்பட்ட அழகிய வேலைப்பாடு பார்ப்பவர்களை ஆச்சரியத்தில்  உறைய வைத்தது.
* விருந்தினர்கள் அமர்வதற்கான மேஜைகள் அனைத்தும் பிங்க் மற்றும் வெள்ளை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
* திருமணத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய குழுவிற்காக மட்டும் ₹3.3 கோடி முதல் ₹5.2 கோடி வரை செலவழிக்கப்பட்டிருந்தது.
என்ன மயக்கம் வருகிறதா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.