குடும்ப செலவுக்கு தாய் பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் லட்சுமணன் (வயது 18). கூலித் தொழிலாளி.
கணேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து சென்று விட்டார். மகேஸ்வரி மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தினமும் வேலைக்கு செல்லும் லட்சுமணன் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் தனது தாயிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரம் ஆகியும் லட்சுமணன் வீட்டுக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்ததால் அவரது தாய் அக்கம் பக்கத்தில் தேடினார்.
அப்போது கட்டாபட் என்னும் இடத்தில் விஷம் குடித்த நிலையில் லட்சுமணன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி உடனடியாக லட்சுமணனை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பதிரியில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.