Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

கணவரைக் கொலை செய்தவரை அதே பாணியில் பழி வாங்கிய மனைவி!


மேட்டுப்பாளையம் அருகே, தனது கணவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தவரை, அதேப் போலவே மனைவி கொலை செய்து பழிவாங்கியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய தம்பி. இவரை கடந்த ஆண்டு, அதேப் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ரவிக்குமார், கடந்த 14ம் தேதி ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

பின்னர் காளிபாளையத்துக்கு சென்ற ரவிக்குமார், தான் கொலை செய்த பெரிய தம்பியின் மனைவி சுகந்தாமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த சமயத்தில், அவரைப் பழி வாங்க நினைத்த சுகந்தாமணி, ரவிக்குமாரின் தலையில் பெரிய கல்லை எடுத்துப் போட்டார். இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் அதே இடத்தில் இறந்து போனார்.

பின்னர் ரத்தக்கறையுடன், மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்று சுகந்தாமணி சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.