ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசிடம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியனிடம் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் மகாதேவன் ஒருசில கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, கட்டாயமாக ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது படிப்படியாக குறைந்து வருகிறது. 50 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். ஹெல்மெட் அணியாமல் பலர் இருசக்கர வாகனத்தில் செல்வதை நாங்கள் தினமும் பார்க்கிறோம். பள்ளிச் ல்லும் மாணவர்களும் ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அரசு அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்றால், என்ன அர்த்தம்?’ என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், கட்டாய ஹெல்மெட் உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும். நீதிமன்ற உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிக்கப்படும். மேலும், இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது" என தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்தியுள்ள விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.