Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழ ஜூஸ் திட்டம் கைவிடப்பட்டது ஏன்? ஜெயலலிதா விளக்கம்


பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழ ஜூஸ் வழங்கும் திட்டம் உகந்தது அல்ல என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதிலளித்து வருகிறார்.

முன்னதாக கேள்வி நேரத்தின் போது, பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்ததை சுட்டிக்காட்டி தி.மு.க. உறுப்பினர் செங்குட்டுவன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாணவர்களுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டத்தை தவிர்த்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், சில மாணவர்களுக்கு மாம்பழச் சாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் இந்த திட்டம் உகந்த திட்டம் இல்லை என அத்திட்டத்தை அரசு கைவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.