மாநகராட்சி மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்வதற்கு பதிலாக, கவுன்சிலர்களே தேர்வு செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'இனி மேயர் பதவி என்பது அதிகாரமற்ற பதவியாக மாறும். உள்ளாட்சிப் பதவிகளில் அ.தி.மு.கவினர் அதிகளவில் இடம்பெறுவதற்கான முன்னோட்டமாக இப்படியொரு நடைமுறை உருவாக்கப்படுகிறது' என அதிர வைக்கின்றனர் உள்ளாட்சி பிரதிநிதிகள்.
சட்டப் பேரவைத் தேர்தலில் வென்ற கையோடு, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கடந்தமுறையைப் போல் அல்லாமல், இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் அ.தி.மு.க தலைமை இல்லை. காரணம். பெரும்பாலான தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே வென்றதுதான். இந்நிலையில், " அக்டோபரில் நடக்க இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.கவினர் அதிக இடத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், இப்படியொரு சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பின்னால் முதல்வரின் ராஜதந்திரமும் அடங்கியிருக்கிறது" என்கிறார் உள்ளாட்சித் துறை அதிகாரி ஒருவர். அவர் நம்மிடம்,
" சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், திண்டுக்கல், தஞ்சை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளிலும் ஆளுங்கட்சி மேயர்களே பதவி வகிக்கின்றனர். இவர்களுக்கு என்று பெரிதாக எந்த அதிகாரமும் இல்லை. மதுரையில் ராஜன் செல்லப்பா மேயராக இருந்தவரையில், கொஞ்சம் செல்வாக்கோடு இருந்தார். ஆனால், கோவை மேயராக இருந்த செ.ம.வேலுச்சாமி, தலைமையின் நிர்பந்தத்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களால் ஒரு மேயர் தேர்வு செய்யப்பட்டால், முதலமைச்சர் நினைத்தாலும், அவரை பதவியை விட்டு அகற்ற முடியாது. செ.ம.வேலுச்சாமியின் பதவி காலியானதும், அந்தப் பதவிக்குப் போட்டியிட்டார் தற்போதைய மேயர் கணபதி ராஜ்குமார்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ' கோவை மாநகராட்சியின் சார்பில் ரூ.2,378 கோடி ரூபாய்க்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என தமிழக அரசு அறிவித்தது. காரணம், மக்களிடம் ஓட்டு வாங்கவும், கோவை மாநகராட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவும்தான். இதுபோன்ற அறிவிப்புகளால் முதல்வருக்கு கூடுதல் மனஅழுத்தம் ஏற்படுகிறது. சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, இதுவரை அதிகாரமற்ற ஒருவராகத்தான் பார்க்கப்படுகிறார். இதுவே, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து மேயரைத் தேர்வு செய்திருந்தால், ஒருவர் பதவியை விட்டு விலகினாலும், இன்னொரு கவுன்சிலரை மேயராக்க முடியும். நேரடி மேயர் தேர்தல் என்பதை கூடுதல் சுமையாகத்தான் முதல்வர் பார்க்கிறார்.
இதைவிடக் கூடுதலான காரணம் ஒன்றும் இருக்கிறது. மாநிலம் முழுவதும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெல்லவில்லை. சென்னை மேயர் பதவி என்பது 200 வார்டுகளை உள்ளடக்கியது. 16 சட்டமன்றத் தொகுதிகள், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. இதில், பத்து தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கிறது. நேரடியான மேயர் தேர்தல் என்றால், கட்டாயம் தி.மு.க மேயர் பதவியைப் பிடித்துவிடும். இதேநிலைதான், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பதவிகளிலும் நிலவுகிறது. அனைத்து தொகுதிகளிலும் சொற்ப வாக்குளில்தான் அ.தி.மு.க வென்றது. உள்ளாட்சி தேர்தலை அசுர பலத்தோடு தி.மு.க எதிர்கொண்டால், அ.தி.மு.க தொண்டர்கள் நிலைகுலைந்துவிடுவார்கள். அதுவே, உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.கவினர் வெற்றி பெறுவது கடினமான காரியம் அல்ல. அங்கு வெற்றி தோல்வியை தீர்மானிப்பதே 50, 100 ஓட்டுக்கள்தான். இங்கு தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் அதிகாரிகளில் பெரும்பாலானோர் ஆளுங்கட்சி சார்புள்ளவர்கள்.
இவர்களை வைத்து வார்டு உறுப்பினர்களை வெற்றி பெற வைப்பது மிக எளிதான காரியம். மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை கவுன்சிலராக்கி, மேயராகவோ, நகராட்சித் தலைவராகவோ அமர வைப்பது சுலபம். ஒருவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தால், இன்னொருவருக்கு பதவி வந்து சேரும். ' நான் மேயர்' என்ற ஆணவத்தில் எவரும் செயல்பட முடியாது. இறுதிவரையில், அவர்களை அச்சத்தோடு வைத்திருக்க முடியும். வார்டு உறுப்பினர்களை அதிக அளவில் பெறுவதும், அவர்களை வைத்து மேயர், சேர்மன், தலைவர் பதவிகளில் அ.தி.மு.கவினரை அமர வைப்பதும்தான் அ.தி.மு.க தலைமையின் நோக்கம். இதற்காக, தங்களுக்கு வேண்டப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளை பலவீனமான இடங்களில் களமிறக்கிவிடும் வேலைகளைத் தொடங்கிவிட்டனர்" என அதிர வைத்தார் அவர்.
அ.தி.மு.கவின் உள்ளாட்சி அஸ்திரத்தை தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதை தேர்தல் நெருக்கத்தில் பார்க்கலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.