சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே.மு.தி.கவும், த.மா.காவும் திசைக்கொன்றாகப் பறக்கும் முடிவுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் 'அவர்கள் போவதால் எந்த நஷ்டமும் இல்லை. யாரும் அவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்' எனக் கொந்தளித்திருக்கிறார் வைகோ.
ம.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், தாயகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், ' மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலை சந்தித்ததால் வந்த விளைவுகள், உள்ளாட்சி தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள், கட்சியை விட்டுப் போன முக்கிய நிர்வாகிகள்' என பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார் வைகோ.
கூட்டத்தில், " ஒவ்வொரு காலகட்டத்திலும், கட்சிக்குள் இருந்து சிலர் வெளியே போவார்கள்; சிலர் உள்ளே வருவார்கள். அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.
தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக உருவான மக்கள் நலக் கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. அது என்றைக்கும் தன் நிலைப்பாட்டில் இருந்து மாறாது. தே.மு.தி.கவும் த.மா.காவும் கூட்டணிக்குள் நீடித்து இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். நம் எண்ணப்படி அவர்கள் இல்லை. அப்படி அவர்கள் போனால் போகட்டும். அவர்களை இனி எந்தக் கட்சியும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாது. தொடக்கத்தில் நாம் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணி அப்படியே இருக்கிறது. பின்னாளில்தான் அவர்கள் இருவரும் நம்முடன் அணி சேர்ந்தார்கள். நாம் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியோடு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால், கணிசமான அளவுக்கு இடங்களைப் பெறுவோம். இவ்வளவு நாள் நாம் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும்" எனப் பேசியிருக்கிறார் வைகோ.
தொடர்ந்து, வருகிற 23-ம் தேதி முதல் 'தொண்டர்களுடன் சந்திப்பு' என்ற நிகழ்ச்சியை மாவட்டம்தோறும் நடத்த இருக்கிறார். அந்தக் கூட்டத்தில், தொகுதிவாரியாக உள்ள பிரச்னைகள், தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்... மக்கள் நலக் கூட்டணி தொடரலாமா? என்பது பற்றியெல்லாம் விவாதம் நடத்த இருக்கிறார் வைகோ. 'இந்த சந்திப்புக்குப் பிறகு ம.தி.மு.கவின் அடுத்தகட்ட பயணம் பற்றி விவரிப்பார்' என்கின்றனர் ம.தி.மு.க. நிர்வாகிகள்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே, மக்கள் நலக் கூட்டணியின் பயணமும் அமைய இருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.