ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவதையொட்டி அடுத்த கவர்னர் தேர்வுக்கான பட்டியலில் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ரூபாய்த்தாளில் கையெழுத்திடப்போகும் அடுத்த அதிர்ஷ்டசாலி யார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் ரகுராம் ராஜன். இவரது பதவிக்காலம் செப்டம்பரில் முடிவடையும் நிலையில், இவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கினார்.
" ரகுராம் ராஜன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னராக ரகுராம் ராஜன் இருக்கக்கூடாது. அவர் அமெரிக்காவின் கிரீன் கார்டு பெற்ற குடிமகன். எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்றும் சுப்ரமணியன் சுவாமி அடுத்தடுத்து குற்றஞ்சாட்டி வந்தார். இதையடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தான் மீண்டும் பதவி நீட்டிப்புப் பெற விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்தார்.

இரண்டாவது முறையாக ஆர்பிஐ கவர்னர் பதவி வேண்டாம் என ரகுராம்ராஜன் தெரிவித்த பிறகு அந்த பதவிக்கு யார் நியமிக்கப்படலாம் என்பது இப்போது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதாவது அடுத்ததாக யார் கவர்னராக வந்தாலும் அதிக சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதாவது பணவீக்க விகிதத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
கடந்த மூன்று வருடங்களாக ஆசியாவிலே அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இனி புதிதாக வரும் கவர்னர் யாராக இருந்தாலும் இதை எல்லாம் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் இப்போது ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார் என்ற பட்டியலில் 4 நபர்களின் பெயர்கள் உள்ளன. ஆர்பிஐயின் துணை கவர்னராக உள்ள உர்ஜித் படேல், ஆர்பிஐயின் முன்னாள் துணை கவர்னர் ராகேஷ் மோகன், சுபிர் கோகர்ன் , மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா ஆகியோர்தான் அந்த நால்வர். செப்டம்பருக்குப் பின் இவர்களில் ஒருவர் ஆர்பிஐ யின் கவர்னராக நியமிக்கப்படுவார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரம்.
மேலும் ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிந்த பிறகு ஆறு பேர் கொண்ட நிதி கொள்கைக் குழுவில் அவர் இணைக்கப்படுவார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.