ஒரு சமயம் கடாரங்கொண்டான் என்ற ஊரில், வியாபாரி ஒருவனின் பணப்பை காணாமல் போய்விட்டது. முடிவில் அவன் பணப்பையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்ததாகவும், அதைக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிப்பதாகவும், விளம்பரப்படுத்தினான். அது ஒரு தொழிலாளியின் கையில் சிக்கியது. அவன் நேர்மையானவன். அவன் விளம்பரப்படி அந்த வியாபாரியிடம் சென்று, பணப்பையை கொடுத்தான். அவனும் பணப்பையை வாங்கி எண்ணிப் பார்த்தான். எல்லாம் சரியாக இருந்தது. ஆனாலும், தான் சொன்னபடி பணத்தை கொடுக்க மனதில்லை.
""இதில் ரத்தினம் ஒன்றும் இருந்தது. அது எங்கே?'' என்றான். தொழிலாளிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
""நீங்கள் சொன்னபடி இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறது. ஆயிரம் ரூபாய் கொடுப்பதுதான் நியாயம்!'' என்று கேட்டான்.
ஆனால், வியாபாரி கொடுக்க மறுக்கவே... தொழிலாளி தன் வழக்கை நீதிமன்றத்தில் பதிவு செய்தான். நீதிபதி இரு தரப்பினரையும் விசாரித்தார். வியாபாரியின் எண்ணம் புரிந்துவிட்டது.
""ஐயா! காணாமல் போன பையில் இரண்டாயிரம் ரூபாயும், ஒரு ரத்தினமும் இருப்பதாகச் சொல்கிறீர். அதனால் இது உங்கள் பை இல்லை. வேறு ஒருவருடையது. அதை எடுத்தவரிடம் கொடுத்து விடுங்கள். நீங்கள் மீண்டும் பணமும், ரத்தினமும் உள்ள பை காணவில்லை என்று அறிவியுங்கள். யாரிடமாவது கிடைத்தால் கொண்டு வந்து கொடுப்பர்!'' என்று கூறினார்.
வியாபாரி திடுக்கிட்டான்... முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என்று அஞ்சி, உண்மையை ஒப்புக் கொண்டு, தொழிலாளிக்கு ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டான்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.