“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில், பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே..” என்பது பாடல் வரிகள். அன்னை மட்டுமல்ல, இதற்கு தந்தையும் தான் பொறுப்பு.
உண்மையில், ஓர் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கிறது எனில் அது அன்னையின் பொறுப்பின்மை. அதே குழந்தை சமூகத்திற்குப் பிரச்சனையாக உருவாகிறது எனில், அது தகப்பனின் பொறுப்பின்மை.
அதிலும், இந்த காலத்தில், நல்லதை சொல்லி வளர்க்க தாத்தா, பாட்டி உடன் இல்லை என்பதாலேயே 50% குழந்தைகள் கலாச்சாரம், பண்பாடு மறந்து வளர்கின்றனர்.
இந்த தலைமுறையில் பெரும்பாலான குழந்தைகள் தவறு செய்வதற்கு முதன்முதல் காரணம் நமது கலாச்சாரம் தெரியாமல் போனது தான். இதை முதலில் பெற்றோர் கருத்தில் கொள்ள வேண்டும்.
பெண்மை:
பெண்மை என்றால் என்ன, வெறும் எதிர் பாலினம் என்று மட்டுமின்றி. பெண்மையை எப்படி மதிக்க வேண்டும், என்ன தான் நட்பு என்றிருந்தாலும் நன்னெறி எல்லைகள் என்னென்ன என்பதை கற்பிக்க வேண்டும்.
இதை பற்றி புரிதல் இல்லாததால் தான், காதல், உறவு என்பதற்கு என்ன பொருள் என்று தெரியாமல், ப்ரேக்-அப் மட்டுமே அறிந்து, திரிந்து வருகிறார்கள்.
உறவுகள்:
இன்று, உண்மையான உறவுகளை தவிர, போலியான உறவுகள் தான் நிறைய இருக்கின்றன, இவ்வுலகில் நிறைந்து இருக்கின்றன. இதற்கு சமூக வலைத்தளங்கள் தான் காரணம் என குற்றம் கூறாதீர்கள்.
உங்களிடம் பகிர வேண்டியதை அவன் / அவள் சமூக வலைதளங்களில் யார் யாரிடமோ தன் உணர்வுகளை சந்தைப்படுத்தி காண்பிப்பதே உங்களது தவறால் தான்.
உணர்ச்சிகள்:
இன்று குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பல பெற்றோர் மத்தியிலும் உணர்ச்சிகள் எமோஜி, ஸ்மைலிகள் போல பொம்மையாகிவிட்டது. இதற்கான காரணம் கண்டறிய என தனி ஆய்வே நடத்த வேண்டும்.
உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்த முடியாத தலைமுறை ஒன்று வேடிக்கையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வளர்ந்து வருகிறது. அதை சரி செய்ய வேண்டிய கடமை பெற்றோர் கையில் தான் இருக்கிறது.
போதும் தொழில்நுட்பம்:
தொழில்நுட்பம் என்பது அறிந்துக் கொள்ள வேண்டியது தான். ஆனால், இன்றைய சூழலில் வளர்ந்துக் கொண்டிருக்கும் பல குழந்தைகள் தொழில்நுட்பத்தை மட்டும் தான் அறிந்து வைத்திருக்கின்றனர்.
ஸ்மார்ட்போன், லேப்டாப் பயன்படுத்த தெரிந்த குழந்தைக்கு சாதாரண கூட்டல், கழித்தல் கணக்கு தெரியாமல் போனதற்கு ஆசிரியர்கள் மட்டும் காரணம் கிடையாது.
சேமிப்பு:
சேமிப்பு என்பது பணத்தில் மட்டும் இருக்க கூடாது, உறவுகளிலும் இருக்க வேண்டும். உறவு என்பது இரத்த பந்தங்கள் மட்டுமல்ல, நல்ல, நண்பர்கள், உடன் பணிபுரியும் ஊழியர்கள் என நல்ல உள்ளங்களை சேமித்து வைக்க வேண்டும்.
ஆபத்தில் பணம் உதவாத இடங்களில் கூட, உறவுகள் தான் உதவும் என்பதை புரிய வைத்து வளர்க்க வேண்டும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.