தமிழக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் கூறினார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் அடங்கிய மக்கள் நலக்கூட்டணி மற்றும் த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் இணைந்து, விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. தேர்தலைச் சந்தித்தது. இதில், ஒரு இடத்தில்கூட தே.மு.தி.க.-த.மா.கா.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறவில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின், உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க. தலைமையில் 6 கட்சி கூட்டணி தொடரும் என மக்கள் நலக்கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்த கூட்டணியோடு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்பட்ட தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் வெளியேறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக முத்தரசன் கூறுகையில், "மக்கள் நலக்கூட்டியக்கம் 2015 ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டு , நவம்பரில் மக்கள் நலக்கூட்டணியாக மாறியது. மக்கள் நலக்கூட்டணியோடு கடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வும், த.மா.கா.வும் தொகுதி உடன்பாடு செய்திருந்தது. சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து என்ன நிலை என்பது குறித்து அந்தந்த கட்சிகள் முடிவு செய்வதற்கு அவர்களுக்கு தான் உரிமை உண்டு.
அதன் அடிப்படையில், தே.மு.தி.க., த.மா.கா. அவர்கள் கட்சி நலனுக்காக முடிவை எடுத்திருப்பார்கள். மக்கள் நலக்கூட்டணியை பொறுத்தவரை தொடர்ந்து செயல்படும். நாங்கள் 4 கட்சியினரும் தொடர்ந்து செயல்படுவோம்" என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், தருமபுரியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், தே.மு.தி.க. மாநில பொருளாளர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''அ.தி.மு.க., தி.மு.க. ஆகியவற்றிற்கு மாற்றாக தொடங்கப்பட்ட தே.மு.தி.க., அதே கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது. சுயநலத்திற்காக சில நிர்வாகிகள் கட்சியைவிட்டு வெளியேறி உள்ளனர். ஆனால் தே.மு.தி.க.வின் உண்மை விசுவாசிகள் கட்டுக்கோப்புடன் கட்சியில் செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும். தே.மு.தி.க.வின் தலைமையை ஏற்று கூட்டணி அமைக்க கட்சிகள் முன்வந்தால், அதுதொடர்பாக பரிசீலிக்கப்படும். பணப்பட்டுவாடா தொடர்பான புகாரால் நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அந்த தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் போட்டியிடுவோம்.
சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வசதியான இடத்தில் இருக்கை ஒதுக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று உரிய இடம் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் பொதுமக்களின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக விவாதங்களை நடத்த வேண்டும்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.